நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் அதிகமான இந்திய இளைஞர்கள் வர்த்தகம் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் அதிகமான இந்திய இளைஞர்கள் வர்த்தகம் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரிக்பீல்ட்ஸில் ஜப்பார் பாய் பிரியாணி உணவகம் திறந்து வைத்த மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பிரியாணி விற்பனையில் புகழ்பெற்ற உணவகமான ஜப்பார் பாய் பிரியாணி உணவகத்தின் புதிய கிளை பிரிக்பீல்ட்ஸில் திறக்கப்பட்டுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தற்போது அதிகமான இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதியதாக பல வியாபாரங்களை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.

ஆகையால் வியாபாரத்தில் ஆர்வம் உள்ள  இளைஞர்கள் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வியாபாரத்தை தொடரலாம் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மேலும் கட்டடங்களை வாங்க நினைப்பவர்கள் இந்த பகுதியில் விலை அதிகமாக இருந்தாலும் கூட இங்கு கட்டங்களை வாங்கி வாடகைக்கு விட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பார்க்கலாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த உணவக திறப்பு விழாவில்  பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், உணவக உரிமையாளர் ஜப்பார் பாய் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

ஜப்பார் பாய் பிரியாணி உணவகத்தின் எட்டாவது கிளை தற்போது கோலாலம்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

ஜொகூரில் கிடைத்த மகத்தான ஆதரவை தொடர்ந்து தற்போது இங்கு இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் போன்று கோலாலம்பூர் மக்களும் இந்த உணவகத்திற்கு முழு ஆதரவு வழங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

குறிப்பாக மலேசியா மக்கள் விரும்பும் வகையில் அனைத்து உணவுகளும் இங்கு பரிமாறப்படும் என ஜப்பார் பாய் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset