நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலின் வேட்புமனு மையம் மூடப்பட்டது: செயல்முறை சீராக இருந்தது

கோத்தா கினபாலு:

சபா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு  மையங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

17ஆவது சபா மாநிலத் தேர்தலுக்கான 25 வேட்புமனு மையங்களும்  ஒரு மணி நேரம் திறந்திருந்த பிறகு இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டன.

அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

வேட்புமனு தாக்கல் செயல்முறை முடிவடைந்தவுடன், தேர்தல் ஆணையம் நிர்ணயித்தபடி, சபா தேர்தல் பிரச்சாரம் 14 நாட்களுக்குத் தொடங்குகிறது.

இது நவம்பர் 28 அன்று இரவு 11.59 மணி வரை நீடிக்கும்.

அனைத்து வேட்புமனு மையங்களிலும் செயல்முறை சீராக நடந்தது.

பல மையங்களில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், வேட்புமனு மையங்களுக்கு வந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அந்தந்த இனக்குழுக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருப்பது கண்டறியப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset