நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கரமுண்டிங் தொகுதியில் தேமு-கெஅடிலான் மோதல் கட்சி, அரசாங்க உறவுகளைப் பாதிக்காது: ஜாஹித்

கோத்தா கினபாலு:

கரமுண்டிங் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி, கெஅடிலான் இடையிலான மோதல் கட்சி, அரசாங்க உறவுகளைப் பாதிக்காது.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

17ஆவது சபா மாநிலத் தேர்தலில் கரமுண்டிங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி, கெஅடிலான் இடையேயான போட்டி நடக்கிறது.

இது மடானி அரசாங்கத்திற்குள் கட்சியின் உறவைப் பாதிக்காது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னும் பின்னும் பிரதமர், கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.

எனவே, தொகுதி மோதல் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இருக்காது. உறவுகளையும் பாதிக்காது.

அமைச்சரவைக கூட்டத்தில் முன்னும் பின்னும், நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம்.

ஆக இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset