நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் பாப்பான் குடியிருப்பாளர்கள் மலிவு விலையில் வீடுகளைப் பெறுவார்கள்: மந்திரி புசார்

ஷாஆலம்:

ஜாலான் பாப்பான் குடியிருப்பாளர்கள் மலிவு விலையில் வீடுகளைப் பெறுவார்கள்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

கிள்ளான் பண்டமாரானில் உள்ள ஜாலான் பாப்பான் வீடுகளை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் ஈடுபட்டுள்ள குடியிருப்பாளர்கள், பெர்மோடலன் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட்டால் கட்டமைக்கப்பட்ட மலிவு விலை வீடுகளைப் பெறுவார்கள்.

விரிவான மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2.83 ஹெக்டேர் நிலத்தை மேம்பாட்டு நிறுவனம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டபோது இன்று காலை நடந்த கூட்டத்தில் இந்த விஷயம் முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக மேம்பாட்டு நிறுவனம் நிலத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.

மேலும் நகரத்தில் குடியேறியவர்களுக்கு நாங்கள் வீட்டுவசதியை உருவாக்குவோம், ஆனால் அது விரிவான வளர்ச்சியை உள்ளடக்கியதால் நேரம் எடுக்கும்.

தற்போதைக்கு அவர்கள் ஸ்மார்ட் வாடகை திட்ட வீட்டில் வசிக்கலாம், நிதி சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி விவாதிக்கலாம்.

இன்று மாநில சட்டமன்றத்தில் சிலாங்கூர் பட்ஜெட் 2026 ஐ தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset