நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில தேர்தலில் தேசியக் கூட்டணி முழு பலத்தை நிரூபிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

சபா மாநில தேர்தலில் தேசியக் கூட்டணி முழு பலத்தை நிரூபிக்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

சபா மாநில தேர்தல் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலை முன்னிட்டு நாளை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.

இத் தேர்தலில் தேசியக் கூட்டணி மொத்தமாக 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

தேசியக் கூட்டணிக்கு இத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

தேசியக் கூட்டணியிலும் பெர்சத்து கட்சியில் பல சர்ச்சைகள் நிலவி வருகிறது.

குறிப்பாக தலைமைத்துவ போராட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆகவே சபா தேர்தலில் தேசியக் கூட்டணி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

இத் தேர்தல் அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவும் அமையவுள்ளது.

ஆகவே தேசியக் கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட்டு இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset