நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புயலுடன் கூடிய கனமழையை தொடர்ந்து கேஎல்ஐஏ முனையம் 1இல் கூரைகளிலிருந்து நீர் கொட்டியது

சிப்பாங்:

புயலுடன் கூடிய கனமழையை தொடர்ந்து கேஎல்ஐஏ முனையம் 1இல் கூரைகளிலிருந்து நீர்  கொட்டியது.

இன்று மாலை முதல் சிப்பாங் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய புயல் மழை பெய்தது.

இதனால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்முனையம் 1 இன் பல பகுதிகளை  நீர் கசிவு ஏற்பட்டது.

இதனை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்  உறுதிப்படுத்தியுள்ளது.

நிலைமையைக் கையாள பொறியியல், செயல்பாடுகள், பாதுகாப்பு குழுக்கள் அணி திரட்டப்பட்டுள்ளதாக அது வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு முயற்சிகள், மின் அமைப்புகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

எந்தவொரு செயல்பாட்டு தாக்கத்தையும் குறைக்க எங்கள் விமான கூட்டாளர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset