நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது; 3,600க்கும் மேற்பட்ட வெள்ள அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: ஃபஹ்மி

புத்ராஜெயா:

நாட்டில் 3,600க்கும் மேற்பட்ட வெள்ள அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

நேற்று வானிலை மாற்றம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முழு எச்சரிக்கையுடன் இருப்பதாக அரசாங்கம் அனைத்து நிறுவனங்களுக்கும் உறுதியளித்துள்ளது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹித் ஹமிடி, லா நினாவை எதிர்கொள்வது உட்பட,

அரசு இயந்திரத்தின் ஏற்பாடுகள் முழுமையாகத் திரட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுவரை, நீர்ப்பாசனம், வடிகால் துறை 3,682 வெள்ள அபாய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.

அவை நடவடிக்கை, கண்காணிப்புக்கான முக்கிய கவனம் செலுத்துகின்றன.

லா நினாவை  எதிர்கொண்டதிலிருந்து அத்துறை அடையாளம் கண்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் தயாரிப்புகளின் முக்கிய கவனம் செலுத்தும் இடங்களாக 3,682 க்கும் மேற்பட்ட வெள்ளப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக 1,768 நீர்நிலை நிலையங்கள், 614 வெள்ள எச்சரிக்கை சைரன்கள் மற்றும் 285 பம்ப் ஹவுஸ்கள் தயார் நிலையில் உள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset