நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த நெதர்லாந்து மாடலின் தாய்க்கு 1.1 மில்லியன் ரிங்கிட் செலுத்த அரசாங்கத்திற்கு 48 மணிநேர அவகாசம்

கோலாலம்பூர்:

மறைந்த நெதர்லாந்து மாடலின் தாய்க்கு 1.1 மில்லியன் ரிங்கிட் செலுத்த அரசாங்கத்திற்கு 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காண்டோமினியத்தின் ஆறாவது மாடியில் நெதர்லாந்து மாடல் இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மிட் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் அவரின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இன்று முதல் 48 மணிநேரம் அரசாங்கம் உள்ளது.

மாடலின் தாயார் கிறிஸ்டினா கரோலினா ஜெரார்டா ஜோஹன்னா வெர்ஸ்டாப்பனைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

வழக்கறிஞர் டத்தோ எஸ்.என். நாயர், இந்தத் தொகையை உடனடியாக அவரது சட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாடிக்கையாளரின் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாங்கம் பணம் செலுத்தத் தவறினால், தேவையான, பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்க எங்கள் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டண உத்தரவை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் இது மட்டுப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset