நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய தலைவருக்கான ஐசிசி கைது ஆணையை மலேசியா ஆதரிக்கிறது: முஹம்மத் ஹசான்

கோலாலம்பூர்:

இஸ்ரேலிய தலைவருக்கான ஐசிசி கைது ஆணையை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

பாலஸ்தீனத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சியோனிச ஆட்சியின் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது.

இந்த கைது ஆணையை மலேசியா தொடர்ந்து ஆதரித்து வரவேற்கிறது.

2014 நவம்பர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட கைது ஆணை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோரைக் குறிக்கிறது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர் முறையாக பட்டினியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.

மேலும் ஐசிசியில் உள்ள வழக்கு இன்னும் விசாரணை கட்டத்திற்குள் நுழையவில்லை என்று அவர் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதிலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேலிய ஆட்சி பொறுப்பேற்காமல் நீண்ட காலமாகப் பாதுகாத்து வரும் தண்டனை விலக்கு கலாச்சாரத்தை ஒழிப்பதிலும் ஐசிசியின் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான படியாகும் என்று அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset