நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்

ஈப்போ:

கடந்த 40 வருடங்களாக ஈப்போ வட்டாரத்தில் " கேட்டறிங்" தொழிலை செய்துவரும் தொழிலதிபர் தமது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன் வெளியிட்டார்.

1980 ம் ஆண்டில் சிறிய முறையில் உபகரணங்களை மற்றவர்களிடம் பெற்று இந்த " கேட்டறிங் " தொழிலை உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலம் என்பதால் பல சிரமங்களுக்கிடையில் இந்த தொழிலை தொடக்கியதாக மார்டின் கூறினார்.

ஈப்போ வட்டாரத்தில் இந்த கேட்டரிங் தொழில் வாயிலாக சமூக நல நிகழ்வுகளில், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரச குடும்ப நிகழ்வு, கலைஞர்கள், பிரமுகர்களின் நிகழ்வுகள் வாயிலாக நல்லதொரு அறிமுகம் கிடைத்ததாக அவர் சொன்னார்.

சாதாரண மனிதனாக இருந்து தொழிலதிபராக உருவான பிரன்சிஸ் மார்ட்டினுக்கு பாராட்டையும், வாழ்த்தினையும் மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துக்கொண்டார்.

இவரின் முதல் நூல் 1980 ல் வெளியிடப்பட்டது. இது இரண்டாவது நூல் ஆகும். இவரின் உன்னத நோக்கம், தொழில் ஆர்வம், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்தல் போன்ற பண்புநலன்களால் இந்த கேட்டறிங் தொழிலில் இன்னமும் தலைசிறந்து விளங்கிறார் என்று அவர் பாராட்டினார்.

சுமார் 1000 பேருக்கு மேல் கலந்துக்கொண்ட இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வில் சிலிபின் தேவாலய பேசும் மார்க் பாக்கியம், அவருடன், ரோட்டரி கிளப் நண்பர்கள், உறவினர்கள், தோழர்கள் வணிக குழுமத்தினர் கலந்து சிறப்பித்தனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset