நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மாநில மந்திரி புசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி இதனை அறிவித்தார்.

ஜொகூர் ஊடக கிளப்பில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ரொக்க மானியமாக 200,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டது போல் ஊடக பயிற்சியாளர்களுக்கு 1,000 ரிங்கிட்  சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்த ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஜொகூர் மாறியுள்ளது.

இந்த சிறப்பு முயற்சி ஜொகூர் உதவித் திட்டத்தின் கீழ் 23 கூறுகளின் ஒரு பகுதியாகும்.

இதற்காக 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset