நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்

மெக்கா:

புனித நகரமான மெக்காவிற்கு அருகிலுள்ள பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தெ சன் யூஎஸ் செய்தியின் படி, சமூக ஊடகங்களில் வைரலான காட்சிகள் நகரைச் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சேற்று நீர் வேகமாகப் பாய்வதைக் காட்டியது.

வெள்ளத்தில் சிக்கிய பல வாகனங்களையும், மற்ற ஓட்டுநர்கள் பெருகி வரும் நீரில் நடந்து செல்ல முயன்றதையும் காணக்கூடிய காட்சிகள் காணப்பட்டன.

பலத்த காற்று, தொடர் மழை காரணமாக லோரிகள், கார்கள் மெதுவாக நகரும் பிரதான நெடுஞ்சாலையில் இது தெளிவாகிறது.

உள்ளூர் ஊடகங்கள் வானிலை நிலையற்றதாகவும், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததாகவும் தெரிவித்தன.

இந்த வார இறுதி வரை பலத்த மழை தொடரும்.

பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் மக்கா, ஜெட்டா மற்றும் மதீனா ஆகியவை அடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset