நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்

பெலம்:

பிரேசிலின் பெலம் நகரில் நடைபெற்றுவரும் COP30 பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே பழங்குடியினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

அவர்கள் அந்தக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த தடிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்று ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கலைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களால் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறினர்.

இவ்வாண்டின் COP30 பருவநிலை மாநாட்டுக்குப் பழங்குடியினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

வனப்பகுதிகளை எவ்வாறு கையாளமுடியும் என்பதில் கூடுதல் உரிமை வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset