நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருவானதற்கு டத்தோஸ்ரீ நஜீப்தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருவானதற்கு டத்தோஸ்ரீ நஜீப் தான் முக்கிய காரணம் என்று மஇகா துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

டத்தோஸ்ரீ நஜீப் பிரதமரான பின் இந்தியர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என என்னிடம் கூறினார்.

உடனே பிரிக்பீல்ட்ஸ் செல்வோம். அங்கு அதிகமான இந்தியர்கள் இருப்பார்கள் என்று நான் கூறினேன். அவரும் இங்கு வந்தார். 

அதன் பின்தான் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருமாற்றம் திட்டம் உதயமானது.

அதுவும் அடுத்த 10 மாதங்களில் இந்த இடம் மேம்பாடு காண வேண்டும்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இங்கு வருகிறார். அவர் தான் இதை திறந்து வைப்பார் என கூறினார்.

உடனே மின்னல் வேகத்தில் பிரிக்பீல்ட்ஸ் வணிக பகுதி லிட்டில் இந்திகாவாக உருவானது.

மேலும் அப்போது கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த போது இந்த உருமாற்ற பணியில் முக்கிய பங்கை ஆற்றினேன்.

இது தான் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருவான வரலாறு.

அன்று முதல் இன்று வரை பிரிக்பீல்ட்ஸ், இப்பகுதி மக்களுடன் நான் கலந்துள்ளேன்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset