செய்திகள் மலேசியா
இந்தியர்களுக்கான அரசாங்க உதவிகளும் சலுகைகளும் நிலைநாட்டப்பட வேண்டும்: டான்ஸ்ரீ இராமசாமி
ஈப்போ:
பேராக்கில் ம இ கா விற்கு உதவிகள், சலுகைகள் வழங்க வேண்டாம் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முஹம்மதிடம் ஆலோசனையை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் வழங்கியுள்ளதாக செய்தி ஒன்று தனியார் இயங்கலையில் வெளியானதாக பேராக் ம இ கா வின் தொடர்புக்குழு தலைவர் டான்ஸ்ரீ எம்.இராமசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இத்தகைய வன்மமான அறிக்கையை ஓர் இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அத்துடன் இத்தகைய அநாகரிக அறிககைகள் தமது இந்திய சமூகத்தை பிளவுபடுத்துவதுடன், நம்மிடையே வேற்றுமை நிலைப்பாட்டை உருவாக்கிவிடும் என்று அவர் வருத்தமாக கூறினார்.
ம இ கா என்பது இந்நாட்டின் இந்தியர்களை பிரதிபலிக்கும் கட்சியாகும். ம இ கா
இந்நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சியாகும். ஆகையால், நீங்கள் யாரராக இருந்தாலும் ம இ கா வை பற்றி பேசும் பொழுதும், விமர்சனம் செய்யும்பொழுதும் நாகரிகமாகமும், அரசியல் முதிர்ச்சியுடன் பேசினால் அனைவருக்கும் நன்மையே என்று உணர்ந்து பேசும்படி அவர் வலியுறுத்தினார்.
பேராக்கில் இந்தியர்கள் இன்னமும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக, பி 40 மற்றும் கல்விநிதியுதவி இதர பிரச்சினைகளில் இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் பொருட்டு ம இ கா வை நாடி வரும் இந்தியர்களுக்கு எந்த கட்சியினர் என்று பாராபட்மின்றி உதவி வருகிறோம். குறிப்பாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விநிதியுதவி வழங்கி வருகிறோம். குறிப்பாக, அதுவும் இன்று 1 இலட்ம் ரிங்கிட் கல்வி நிதியதவி வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டத்தோ அ.சிவநேசன் முதலில் உங்கள் சுங்கை தொகுதியில் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வருகின்றனர். முதலில் அவர்களுக்கு உதவுவதை முன்னுரிமை வழங்குகள். ம இ கா வை விமர்சனம் செய்வதை ஓரம்கட்டிவிட்டு உங்கள் மக்கள் பணியை சிறப்பாக செய்யும்படி அவர் அறிவுறுத்தினார்.
ம இ கா கட்டுப்பாடு கொண்ட கட்டுக்கோப்பான கட்சி என்பதனை உணர்ந்து பேசுங்கள். இந்நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த 3 முதன்மை கட்சிகளில் ம இ காவும் ஒன்றாகும்.
அதனால், அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் மேம்பாடு பற்றி குறைகூற யாருக்கும் தகுதியில்லை. இந்நாட்டு இந்தியர்களின் தொடர் வளர்ச்சிக்கு ம இ கா பெரும் பங்காற்றியுள்ளதை யாரும் மறக்கவும், மறக்கவும் முடியாது என்று அவர் கருத்துரைத்தார்.
ம இ கா வின் நிலைப்பாடு இம்மாதம் 16 ல் நடைபெறும் ம இ கா மாநாட்டில் தெரிந்துவிடும். ஆகையால், ம இ காவிற்கு வழங்க வேண்டிய உதவிகளையும் சலுகைகளையும் தடுக்க நினைப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
ஆகையால், இந்நாட்டு இந்திய அரசியல் தலைவர்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் அறிக்கைகள் மற்றும் கருத்துரைக்கும்படி ம இ காவின் தேசிய உதவித்தலைவருமாகிய அவர் கேட்டுக்கொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:34 pm
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு
November 12, 2025, 9:33 pm
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் குறித்து ரக்கான் வலைத்தளத்தில் புகாரளிக்கலாம்: சரஸ்வதி
November 12, 2025, 9:32 pm
இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
