நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்

ரவாங்:

இந்த மாத இறுதியில் பெரோடுவா மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படுவது தேசிய விழா பட்டியலில் உள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

PERODUA EV மிகவும் சாதாரணமான ஒரு கருத்தையும் தத்துவத்தையும் நிறைவேற்றுகிறது.

மேலும், PERODUA EV மாதிரி உள்ளூர் நிபுணத்துவத்துடன், குறிப்பாக பூமிபுத்ராவால் உருவாக்கப்பட்டது.

இந்த கார் மலிவு விலையில் கிடைப்பதால், மடானி கருத்தை பூர்த்தி செய்கிறது.

உற்பத்தி தேசிய தேவைகளைப் பூர்த்தி செய்து புதிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.

ரவாங் பெரோடுவா ஊழியர்களுடனான நட்பு அமர்வின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset