நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தொழில்முனைவோரை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு:

சபாவில் உள்ள தொழில்முனைவோரை அரசாங்கம் ஒருபோதும்  புறக்கணிக்கவில்லை என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

தெக்குன் மூலம், 1998 முதல் கடந்த அக்டோபர் வரை சபாவில் 66,992 தொழில்முனைவோருக்கு மொத்தம் 1.25 பில்லியன் ரிங்கிட்டை நிதியளித்துள்ளது.

இது மாநிலத்தில் உள்ள குறு தொழில்முனைவோர் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கிறது.

இந்த மொத்த ஒதுக்கீடு, அதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் 861,666 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட 10.99 பில்லியன் ரிங்கிட்டில் ஒரு பகுதியாகும்.

2025 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை சபாவில், பல்வேறு துறைகளில் உள்ள 5,567 தொழில்முனைவோருக்கு RM137 மில்லியன் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூண்களாக சிறு, நடுத்தர நிறுவன தொழில்களையும் அரசாங்கம் எப்போதும் நிலைநிறுத்தி வருகிறது. 

சபாவில் வளமான வளம் உள்ளது என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை.

சபாவில் உள்ள பல தெக்குன் தொழில்முனைவோர் சிறு வணிகங்கள், விவசாயம், கைவினைப்பொருட்கள், உணவுத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

இது எங்கள் பலம். இந்த தொழில்முனைவோர் தங்கள் குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புகளைத் திறந்து உள்ளூர் சமூகப் பொருளாதாரத்தைத் தூண்டுகிறார்கள்.

தெக்குன் தொழில்முனைவோருடனான நட்பு சந்திப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset