நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணியில் இருந்து உப்கோ கட்சி வெளியேறியது

கோலாலம்பூர்:

நம்பிக்கை கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக உப்கோ எனும் ஐக்கிய முற்போக்கு கினபாலு கட்சி இன்று அறிவித்துள்ளது.

இந்த விலகல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இன்று நடைபெற்ற உப்கோ உச்ச மன்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ நெல்சன் டபிள்யூ அங்காங் தெரிவித்தார்.

கட்சியின் போராட்டம், வழிகாட்டுதலின் அடிப்படையான சபா முதல் நிகழ்ச்சி நிரலைப் பற்றி விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருந்ததாக அவர் கூறினார்.

இந்த முடிவு நம்பிக்கை கூட்டணி தலைவர், அதன்கூறு கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset