நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வத் வழக்கில் சிக்கிய அமைச்சின் மூத்த அதிகாரி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்

புத்ராஜெயா:

தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஒரு மூத்த அமைச்சக அதிகாரி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தவறான நடத்தை தொடர்பான விசாரணையை உடனடியாகத் தொடங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 1993ஆம் ஆண்டு பொது பணியாளர்களின் (நடத்தை, ஒழுக்கம்) விதிமுறைகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தவறான நடத்தை வழக்கை நான் கவனத்தில் கொண்டுள்ளேன்.

அந்த அதிகாரி உடனடியாக ஓய்வில் அனுப்பப்பட்டார்.

அதே நேரத்தில் தவறான நடத்தை குறித்து விசாரணை உடனடியாகத் தொடங்கப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக சபாவின் கோத்தா கினாபாலுவில் இருந்தபோது, ​​ஒரு அமைச்சின் பொதுச் செயலாளர் கல்வத் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மத அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறும் 11 வினாடி வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset