நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய தீர்வை - லெவி விதிக்கப்படவிருக்கிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் எரிபொருளை (sustainable aviation fuel) விமான நிறுவனங்கள் பெற தீர்வை விதிக்கப்படுவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) அறிவித்தது.

தீர்வை வரி 1 வெள்ளியிலிருந்து 41.60 வெள்ளிவரை இருக்கும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் விமானச்சீட்டுகளுக்கு அது பொருந்தும். குறிப்பாக, விமானம் அடுத்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு புறப்பட்டால் தீர்வை பொருந்தும்.

விமானப் பயணங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறு தீர்வையின் தொகை அமையும்.

பிரிவு 1: தென்கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள்

லெவி - தீர்வை: $1-$4

பிரிவு 2: வடகிழக்காசியா, தெற்காசியா, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினி (Papua New Guinea) ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள்

லெவி - தீர்வை: $2.80 அல்லது $11.20

பிரிவு 3: ஆப்பிரிக்கா, மத்திய & கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, பசிபிக் தீவுகள், நியூசிலந்து ஆகியவற்றுக்குச் செல்லும் விமானங்கள்

லெவி - தீர்வை: $6.40 அல்லது $25.60

பிரிவு 4: அமெரிக்கக் கண்டங்களுக்குச் செல்லும் விமானங்கள்

லெவி - தீர்வை: $10.40 அல்லது $41.60

தீர்வை மூலம் வசூலிக்கப்படும் தொகை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் எரிபொருளை வாங்குவதற்கான நிதிக்குச் செல்லும் என்று ஆணையம் கூறியது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset