நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஸ்ஜித் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு சம்பவம்: அதிர்ச்சியில் வணிகர்கள், மக்கள்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இன்று காலை மீண்டும் ஒரு புதிய நில அமிழ்வு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இது, தலைநகரின் பழமையான நிலத்தடி உள்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை குறித்து பொதுமக்களிடையே புதிய அச்சத்தை எழுப்பியுள்ளது.

பாம்பே ஜூவல்லரி நகைக் கடைக்கு முன்பாக, இன்று காலை 8:39 மணியளவில் இந்த நிலப் புதைவு பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலப் புதைவுக்கான உண்மையான காரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த புதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு டிபிகேஎல், ஆய்ர் சிலாங்கூர், போலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

அவர்கள் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, லோரோங் மஸ்ஜித் இந்தியா 4 (பள்ளிவாசலுக்கு அடுத்து) முதல், நிலப் புதைவு ஏற்பட்ட பகுதி வரையிலான மஸ்ஜித் இந்தியா சாலை, அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset