செய்திகள் மலேசியா
இலக்கவியல் வாயிலாக ஆலய மேலாண்மை திட்டம்; ஆலயங்களின் ஆர்ஓஎஸ், திவால் பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
இலக்கவியல் வாயிலாக ஆலய மேலாண்மை திட்டம் ஆலயங்களின் ஆர்ஓஎஸ், திவால் பிரச்சினைகளுக்கு முழு தீர்வை கொடுக்கும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாட்டில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால் இலாகாவின் நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளன.
இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் முறையான ஆண்டு அறிக்கை, கணக்கறிக்கை இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.
இதன் அடிப்படையில் தான் மஹிமா ஆலய மேலாண்மை இலக்கவியல் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இந்த முயற்சியின் கீழ் மஹிமா, டிஎஸ்கே சமூக நல அமைப்பு, GRASP Software Solution Sdn. Bhd. ஆகிய நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களும் இலக்கவியல் முறையில் இயக்குவதற்காக Temple Management System என்பதனை அறிமுகப்படுத்துகின்றோம்.
இந்த திட்டத்திற்கான ஹார்ட்வேவை மஹிமா இலவசமாக ஆலயங்களுக்கு வழங்க உள்ளது.
அதேவேளையில் ஆலயங்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்த உள்ளது.
அர்ச்சனைகள் தொடங்கி ஆலயங்களுக்கான நிதி உதவிகள் வரை அனைத்துமே இலக்கியவியல் மூலம் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் ஆலயத்தின் கணக்கு வழக்குகள் முறையாக இருக்கும்.
குறிப்பாக ஆண்டு இறுதியில் ஆலயத்தின் கணக்கறிக்கையை சங்கங்களின் பதிவிலாகாவிற்கு சமர்ப்பிக்க பெரும் உதவியாக இருக்கும் என்று இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
முதல் கட்டமாக மஹிமாவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆலயங்களில் இருந்து இந்த திட்டம் தொடங்க உள்ளது.
அதைத்தொடர்ந்து மற்ற ஆலயங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் இலக்கவியலுக்கு மாற வேண்டும் என்பதே மஹிமாவின் முதன்மை இலக்காக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும்: யுனேஸ்வரன்
August 28, 2026, 10:55 pm
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல்
August 28, 2026, 4:30 pm
