செய்திகள் மலேசியா
3,500 பேருக்கு ரமலான் உதவிப் பொருட்கள்: தலைநகர் அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் சார்பில் வழங்கப்பட்டது
கோலாலம்பூர்:
3,500 பேருக்கு ரமலான் உதவிப் பொருட்கள் திருக் குர்ஆன் மனனப் பள்ளியான அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவில் வழங்கப்பட்டது.
அதன் நிறுவனர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தய்யூப்கான் இதனை கூறினார்.
அல் மதரஸதுல் ஃபரீதிய்யா, அலிமாஜூ உணவகக் குழுமம், பிரெஸ்மா, நெஸ்ட்லே ஆகியவை இணைந்து 32ஆவது ஆண்டாக வசதி குறைந்த மக்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்களை வழங்கப்பட்டது.
பல நல்லுள்ளங்களின் ஒத்துழைப்புடன் கிட்டத்தட்ட 3,500 பேருக்கு உதவிப் பொருட்கள வழங்கப்பட்டது.
ரமலான் மாதத்தில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவுவதை அல் மதரஸதுல் ஃபரீதிய்யா அறக் காரியமாக எண்ணி செயல்பட்டு வருகிறது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
இதனிடையே உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் தேசிய போலிஸ்படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான், அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அப்துல் சமாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மிம் காய்ன் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத், கிளந்தான் சுல்தான், பிரிம் ஆரிஃப், பெரஸ்மா துணைத் தலைவர் முஹிப்புல்லா கான், பொருளாளர் நசர்தீன், டத்தோ அலி ஜின்னா, டத்தோ ஜைனி, மியாக் நிறுவனத் தலைவர் ஹாஜி இப்ராஹிம், கிம்மா அன்சாரி, எம். எம். ஒய். சி ரிஃபாயி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 7:46 pm
ஜொகூரில் நோன்பு திறப்பு, ரமலான் உதவி வழங்கும் நிகழ்வு சமுதாய மக்களை ஒன்றிணைத்தது
March 1, 2026, 5:53 pm
பிபிபி கட்சியில் கல்வி உதவி அழைப்பு சேவை; அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டும்: விக்னேஷ்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
