நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது

சிங்கப்பூர்:

டன்லப் ஸ்ட்ரீட்டில் (Dunlop Street) கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (8 நவம்பர்) விடியற்காலை சுமார் 3.55 மணிக்குச் சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

சந்தேக நபர், 28 வயது ஆடவரை ஒரு சந்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக நம்பப்படுகிறது.

அந்த 28 வயது ஆடவரிடம் சந்தேக நபர் பணம் கேட்டதாகத் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

பாதிக்கப்பட்டவர் சுமார் 190 வெள்ளி பணத்தைக் கொடுத்ததாகக் காவல்துறை கூறியது.

அவர் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதிகாரிகள் கண்காணிப்புக் கேமரா மூலம் சந்தேக நபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

20 மணிநேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.

காயம் விளைவித்துக் கொள்ளையடிக்கும் குற்றத்துக்குக் குறைந்தது 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் குறைந்தது 12 பிரம்படியும் அந்த ஆடவருக்கு விதிக்கப்படலாம்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset