நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Roots, Trade and Faith of the Chulias நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர்:

நேற்று 9 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் டேவான் பாஹ்சா டான் புஸ்தகா மண்டபத்தில் ஏவிஎம் ஹாஜா மொய்தீன் எழுதிய Roots, Trade and Faith of the Chulias நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலின் செயலாளர் நஸ்ருல் ஹக்கின் பிரார்த்தனையுடன் துவங்கிய நிகழ்ச்சியில் பள்ளியின் துணைத் தலைவர் டத்தோ ஹிஷாமுத்தீன் துவக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நூலாசிரியரும் மஸ்ஜித் இந்தியா தலைவருமான ஹாஜா மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து கோலாலம்பூர் மாநகர மன்ற மேயர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முஹம்மத் ஷெரிஃப் நூல் வெளியீடு செய்து உரையாற்றினார். 

முன்னாள் வெளியுறவு அமைச்சர் டான் ஸ்ரீ ஹமீத் அல்பார் சிறப்புரையாற்றினார். இறுதியாக மஸ்ஜித் இந்தியா பொருளாளர் இப்ராஹிம் நன்றி நவின்றார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset