நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாவா வீடுகளை காலி செய்யும் நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது: குணராஜ்

கிள்ளான்:

கம்போங் ஜாவா லோட் 11113 வீடுகளை காலி செய்யும் நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.

வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே திட்டத்தின் கட்டுமானத்திற்காக  கம்போங் ஜாவாவின் 11113வது லாட்டில் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்து.

இப்பணிகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்சேவா வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் புதிய குடியிருப்புகளுக்குச் செல்வதற்கு இடம் வழங்குவதற்காக, இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இடிப்புப் பணியை ஒத்திவைக்க அவர் ஒப்புக்கொண்ட பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

ஆரம்பத்தில், குடியிருப்பாளர்கள் இடம்பெயர போதுமான அவகாசம் அளிக்க ஒரு மாத கால அவகாசம் கோரினர்.

இருப்பினும், கலந்துரையாடல்கள் மற்றும் பல தடைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, மந்திரி புசார் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க ஒப்புக்கொண்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset