செய்திகள் மலேசியா
மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும் சபாவைத் திருப்பித் தர தேசிய முன்னணி விரும்புகிறது: ஜாஹித்
கோத்தா கினபாலு:
மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும் சபாவைத் திருப்பித் தர தேசிய முன்னணி விரும்புகிறது.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
17ஆவது பொதுத் தேர்தலை, பிகின் பாலிக் சபா என்ற முழக்கத்துடன் தேசிய முன்னணி எதிர்கொள்கிறது.
இது கட்சி இயந்திரம், வாக்காளர்கள் மாநிலத்தின் மாற்றம், வளர்ச்சிக்கான வெற்றியை உறுதி செய்வதற்கான உந்துதலாக தேசிய முன்னணி பயன்படுத்தியது.
இந்த முழக்கத்தின் மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் சுதந்திரமாக இருக்கவும் முடியும் என்று கோரினார்.
சபா மாநிலம் எப்போதும் சபா மக்களுக்கானது. மேலும் எங்கள் சபாவை மீட்போம் என்ற முழக்கத்தை செயல்படுத்த விரும்புகிறோம்.
இந்த முறை தேர்தலில் நாங்கள் ஒரு கேம் சேஞ்சர் ஆவோம்.
சபா மக்களுக்காக கடுமையான மாற்றங்களைச் செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
