நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநிலத் தேர்தலுக்கான 41 வேட்பாளர்களை தேசிய முன்னணி அறிவித்தது

கோத்தா கினபாலு:

சபா மாநிலத் தேர்தலுக்கான 41 வேட்பாளர்களை தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணியுடம் கூட்டு வைத்துள்ளது.

அதே வேளையில் ஜிஆர்எஸ், வாரிசான் கட்சிகளுடன் மோதுகிறது.

இருந்தாலும்  சபா மாநிலத் தேர்தலில் 73 இடங்களில் 41 இடங்களில் தேசிய முன்னணி போட்டியிடும்.
எதிர்பார்த்தபடி, சபா தேசிய முன்னணி தலைவர் பூங் மொக்தார் ராடின் 2020 முதல் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய லமாக்கைப் பாதுகாக்கிறார்.

சூக்கில் ஆர்தர் ஜோசப் குருப் மீதும், டெம்பாசுக்கில் அப்துல் ரஹ்மான் டஹ்லான் மீதும், உசுகானில் சலே சைட் கெருவாக் மீதும், கரம்புனையில் யாகுபா கான் மீதும் தேசிய முன்னணி நம்பிக்கை வைத்துள்ளது.

கடந்த 2020 மாநிலத் தேர்தலில் பிஎன் 14 இடங்களை வென்றது.

ஆனால் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் பின்னர் ஹாஜிஜி நூர் நிர்வாகத்தை ஆதரிக்கத் தேர்ந்தெடுத்தனர்.

மேலும் கடந்த செப்டம்பர் 20 அன்று, பூங் மொக்தார் 17ஆவது மாநிலத் தேர்தலை தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதை உறுதி செய்வதற்கான இறுதிப் போர் என்று விவரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset