செய்திகள் மலேசியா
வீடுகளை காலி செய்ய கம்போங் ஜாவா மக்களுக்கு மந்திரி புசாரிடம் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது: குணராஜ்
கோத்தா கினபாலு:
கம்போங் ஜாவா லோட் 11113 மக்கள் வீடுகளை காலி செய்ய கூடுதல அவகாசம் வழங்க மாநில மந்திரி புசாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
லோட் 11113 கம்போங் ஜாவாவில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி 7 நாட்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்மார்ட்சேவா வீடுகளுக்கு செல்ல சில குடியிருப்பாளர்கள் மாநில அரசால் உதவி பெற்றுள்ளனர்.
இதனால் அவர்களுக்கான காலக்கெடு இந்த மாத இறுதி வரை கால நீட்டிக்க வேண்டும்.
காரணம் அவர்களில் பலர் மூத்த குடிமக்கள் ஆவர்.
இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியிடம் கோரிக்கையை முன்வைத்தேன்.
குடியிருப்பாளர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டியிருப்பதால், கால நீட்டிப்பை அங்கீகரிக்க அவர் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
சிலாங்கூர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரிக்கு எனது மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவை எடுப்பார் என நான் நம்புகிறேன் என குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
