நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கல்மேகி புயலைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸை தாக்க வருகிறது ஃபுங்-வோங் சூறாவளி: 8 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை 

மணிலா:

பிலிப்பைன்ஸ் மற்றொரு புயல்காற்றை எதிர்நோக்கத் தயாராகிறது.

ஃபுங்-வோங் (Fung-Wong) சூறாவளி நாளைக்குள் கரையை அடையும் என்று அஞ்சப்படுகிறது.

சுமார் 8 மில்லியன் பேர் பாதிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் அபாயம் இருப்பதாக  மணிலா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் வீடுகளைவிட்டு உடனடியாக வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முன் எச்சரிக்கையாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் வீசிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் நாட்டில் பேரிடர் நிலை நீடிக்கிறது.

கல்மேகி புயலால் சுமார் 180 பேர் மாண்டனர். மேலும் 130 பேரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset