நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இனப்படுகொலை புரிந்துவரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்குக் கைதாணை: துருக்கியே பிறப்பித்துள்ளது

அங்காரா: 

துருக்கியே, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்குக் (Benjamin Netanyahu) கைதாணை பிறப்பித்துள்ளது.

காஸாவில் அவர் இனப் படுகொலை புரிவதாகக் கூறி துருக்கியே அவ்வாறு செய்துள்ளது.

இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 36 தலைவர்களுக்கும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருக்கியே இஸ்ரேலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முற்படுவது இது முதல் முறை அல்ல.

சென்ற ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து அது இஸ்ரேல் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset