நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜகர்த்தா பள்ளிவாசலில் வெடிப்பு: 54 பேர் காயம் 

ஜகர்த்தா:

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று அங்கு நடந்த தொழுகையின்போது அது நடந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பள்ளிக்கூட வளாகத்திற்குள் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 54 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறிய காயங்கள் முதல் கடும் தீக்காயங்கள் வரை அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

வெடிப்புக்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

ஜக்கர்த்தாவின் வடக்குப் பகுதியில் கெலாப்பா காடிங் (Kelapa Gading) எனும் பகுதியில் அந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

ஆதாரம் : Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset