நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இன்று ரத்து

வாஷிங்டன்:

அமெரிக்காவில் இன்று நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருக்கிறது.

அரசாங்க முடக்கம் முடிவுக்கு வராவிட்டால் அடுத்த சில நாளில் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சியான் டஃப்பி (Sean Duffy) கூறியிருக்கிறார்.

இப்போதைக்கு அது உள்ளூர் விமானச் சேவையை மட்டுமே பாதிக்கும்.

அரசியல் இழுபறியால் அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் முதல்தேதியிலிருந்து முடங்கிக்கிடக்கிறது.

சுமார் 1.4 மில்லியன் ஊழியர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
ஆதாரம்: C N N

​​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset