நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாமையும் தாக்கியது: 6 விமான நிலையங்கள் மூடப்பட்டன  

ஹனோய்:

பிலிப்பைன்ஸில் வீசிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாம் கரையை அடைந்திருக்கிறது.

நேற்று வியட்நாமின் மத்திய பகுதியில் மணிக்குச் சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால் கட்டடங்களின் சன்னல்களும் கூரைகளும் உடைந்தன.

கரையோரம் வசிக்கும் 7,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் பள்ளிக்கூடங்களும் குறைந்தது 6 விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Typhoon Kalmaegi hits Vietnam after killing at least 114 in Philippines -  BBC News

10 மீட்டர் உயரத்துக்கு அலை எழுந்தது.

மத்திய வியட்நாம் முழுவதும் ஆறுகளில் நீர்மட்டம் ஆபத்தான நிலையை எட்டியிருக்கிறது.

சூறாவளி ஓயும்வரை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

தேடல் மீட்புப் பணிகளில் 260,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு வியட்நாம் எதிர்நோக்கும் 13-ஆவது புயல் இது.

இந்த ஆண்டில் மட்டும் இயற்கைப் பேரிடர்களால் வியட்நாமில் மாண்டவர்கள் அல்லது காணமல்போனவர்களின் எண்ணிக்கை 279.

நாட்டில் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்புச் சுமார் 2 பில்லியன் டாலருக்கும்  அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஹோசிமின் சிட்டி அக்பர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset