நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு

மணிலா:

Kalmaegi சூறாவளி காரணமாக
பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்மேகி (Kalmaegi)  சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 140ஆகப் பதிவாகியுள்ள நிலையில் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) அவ்வாறு அறிவித்தார்.

நாட்டின் மத்திய பகுதிகளில் 127 பேரை இன்னும் காணவில்லை.

சிபூ (Cebu) மாநிலம் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 70க்கும் அதிகமானோர் மாண்டனர்.

69 பேர் காயமுற்றனர். 65 பேரைக் காணவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.

மாண்டோர் பெரும்பாலோர் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகள் தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபரின் அவசரநிலை பிரகடனம் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கு உதவும்.

கால்மேகி பிலிப்பீன்ஸில் இந்த ஆண்டு வீசும் 20ஆவது சூறாவளி. அதுவே இவ்வாண்டின் ஆக மோசமான பேரிடர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset