நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்:

பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கச் சிங்கப்பூர் சில புதிய பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.

அமைதியை நிலைநாட்டவும் வட்டாரத்தைச் சீரமைக்கவும் அவை உதவும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சொன்னார். 

மின்னிலக்கப் பொருளாதாரம்; மின்னிலக்கத் தொழில்முனைப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.

2026ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் அந்தப் பயிற்சிகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவித்தொகுப்பின்கீழ் (Enhanced Technical Assistance Package) இடம்பெறும்.

கடந்த திங்கட்கிழமை (3 நவம்பர்) டாக்டர் பாலகிருஷ்ணன் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன வட்டாரங்களுக்கும் 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.

அவர் பாலஸ்தீன வட்டாரத்தின் நிர்வாகத் தலைநகர் ரமல்லாவிற்குச் (Ramallah) சென்றார்.

அங்கு அவர் உலக உணவுத் திட்டத்திற்கு (The World Food Programme) 500,000 டாலர் (சுமார் 653,000 வெள்ளி) காசோலையை வழங்கினார்.

அந்தத் தொகை காஸாவில் மேற்கொள்ளப்படும் அவசர நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். 

பசியைப் போக்கவும் மக்களிடையே நம்பிக்கையை விதைக்கவும் சிங்கப்பூர் துணைநிற்கும் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset