செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
மணிலா:
கால்மேகி (Kalmaegi) சூறாவளி நேற்றிரவு பிலிப்பீன்ஸ் கரையை அடைந்திருக்கிறது.
150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் பருவமழை தொடரலாம்; அதிகபட்சம் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.
தினகட் (Dinagat) தீவுகளில் முதலில் வீசிய சூறாவளி சிபூ (Cebu) நோக்கி நகர்கிறது.
விசயஸ் (Visayas) தீவுக் கூட்டம், மிண்டானவ் (Mindanao) ஆகிய வட்டாரங்களின் சில பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
24 மணி நேரத்துக்குள் கால்மேகி மேலும் வலுவாகலாம் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 6:15 pm
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஹந்தாவைரஸ்: இதுவரை 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
May 11, 2026, 10:53 am
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
