நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்

கோத்தா பாரு:

நராதிவத்தின் சுங்கை கோலோக்கில் நேற்று மலேசியர் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், சுங்கை கோலோக் போலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

போலிஸ் படை வட்டாரத்தின்படி, சோதனைகளின் அடிப்படையில், சந்தேக நபருக்கு தாய்லாந்து, மலேசியா ஆகிய இரட்டை குடியுரிமை உள்ளது.

சந்தேக நபர் நேற்று இரவு சரணடைந்த பிறகு, அவரிடம் இரண்டு அடையாள ஆவணங்கள் இருந்தது.

இதை தொடர்ந்து நாங்கள் அவரைக் கைது செய்தோம் என்று  தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, சுங்கை கோலோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் மலேசிய நபர் ஒருவர் 18 முறை சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset