நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலம்பக் கலைக்கு முக்கிய பங்காற்றிய டத்தோ மகாகுரு சிவாவுக்கு தங்க நிற பட்டையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

சாலாக் திங்கி:

சிப்பாங் சிலம்பக் கழகம்  ஏற்பாடு செய்த உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய தற்காப்புக் கலை வல்லுநர் ஹன்சி ஜமால் மெய்சார் தலைமையிலான சிறப்புப் பயிற்சிப் பட்டறை  சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த மாபெரும் நிகழ்வை ஹன்சி ஜமாலும் மகாகுரு சிவாவும் வழிநடத்தினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்ப ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விருதுகள், கௌரவிப்புகள்
இந்தப் பயிற்சிப் பட்டறையின் நிறைவில், சிலம்பக் கலைக்குப் பங்களித்த முக்கியப் பிரமுகர்களுக்கு சிறப்பு  வழங்கப்பட்டன.

மகாகுரு செல்வராஜாவுக்கு சிவப்பு நிறப் பட்டையம் வழங்கப்பட்டது.

சிலம்பக் கலையில் பல தசாப்தங்களாக ஆற்றிய அரும்பணிக்காக, மகாகுரு செல்வராஜாவுக்கு உயரிய சிவப்பு நிறப் பட்டை வழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இது அவரது அர்ப்பணிப்புக்கும், மாணவர்களை உருவாக்கிய சேவைக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

டத்தோ மகாகுரு சிவா அவர்களுக்கு உலகத்தின் மிக உயர்ந்த தங்க நிறப் பட்டையம் வழங்கி கௌரவிக்கபட்டார்.

மலேசிய சிலம்பக் கழகத்தின் தொற்றுனர் மகாகுரு ஆறுமுகத்தின் மகன் டத்தோ மகாகுரு சிவாவுக்கும், சிலம்பக் கலையின் உலகளாவிய வளர்ச்சிக்கும், அதன் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பேணிக்காத்ததற்கும் கிடைத்த அங்கீகாரமாக, உலகத்தின் மிக உயர்ந்த கௌரவமான தங்க நிறப் பட்டையம் வழங்கப்பட்டது.

இந்தப் பட்டையம், அவரது தன்னலமற்ற சேவைக்கும், சிலம்பக் கலையின் மீதான அவரது ஆழ்ந்த பக்திக்கும் கிடைத்த உச்சபட்ச மரியாதையாகும்.

ஜெர்மானிய வல்லுநரின் நேரடிப் பயிற்சி, மலேசிய சிலம்பக் கலைஞர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தையும், உலகத் தரத்திலான நுட்பங்களையும் கற்றுக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது.

சிலம்பக் கலையின் எதிர்கால வளர்ச்சிக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று நிகழ்வில் கலந்து கொண்டோர் நம்பிக்கை தெரிவித்தனர்.

முக்கியப் பிரமுகர்களின் சிறப்பு வருகை இந்த மாபெரும் சிலம்பக் கலை விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, பல முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த வருகை, மலேசியாவில் சிலம்பக் கலைக்குக் கிடைக்கும் அரசாங்க மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்தது.

டத்தோ ஸ்ரீ வேணுகோபால்,
நகராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், கலை நுட்பக் குழுத் தலைவர் குணா, சிரம்பான் நகராட்சி மன்றத் தலைவர் திலகா, சிப்பாங் சிலம்பக் கழகத் தலைவர் விஜயசேகரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிலம்பக் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து கௌரவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset