நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்

கோலாலம்பூர்:

இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்.

நிதித் துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் இதனை கூறினார்.

இந்த வாரம் அல்லது அடுத்த சில வாரங்களில் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான புதிய வழிமுறையை நிதியமைச்சு அறிவிக்கும்.

அரசாங்கம் இந்த விஷயத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மக்களவையில் தெரிவித்தார்.

நான் சொன்னது போல், எந்தக் குழுவையும் விட்டுவிட நாங்கள் விரும்பவில்லை.

இ-ஹெய்லிங ஓட்டுநர்களுக்காக அரசாங்கம் அவர்களின் லிட்டர் நுகர்வை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது

ஆனால் அமைச்சு இன்னும் வழிமுறையை ஆராய்ந்து வருகிறது.

ஒருவேளை இந்த வாரத்தில் அல்லது சில வாரங்களில் நிதியமைச்சு அதை அறிவிக்கும்.

கோல கிராப் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset