நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு

ஈப்போ:

பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றன.

கிளப்புளுக்கிடையிலான 12 வயதிற்கும் கீழ்பட்டோருக்கான கால்  பந்துப் போட்டி ஈப்போ மாநகரில் சிறப்புடன் நடைபெற்றது.

பிளேக் பெந்தர் கிளப் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற இபோட்டியை பேரா மாநிலம், தலைநகரில் இருந்தும் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றனர்.

ஈப்போ பாடாங்கில்  நடைபெற்ற இப்போட்டியை மீப்பா கால்பந்து இயக்கத்தின் உதவித்  தலைவர் ஸ்ரீ சங்கர் தொடக்கி வைத்து போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இப்போட்டியில் பேரா பிளேக் பெந்தர் குழு முதல் நிலையில் வாகை சூடியது.

இரண்டாவது இடத்தை புக்கிட் கந்தாங் குழுவும், மூன்றாவது இடத்தை அனாக் ரிமாவும், நன்காவது இடத்தை யூசிஎஸ்ஐ குழுவும் பிடித்தது.

பேரா பிளேக் பெந்தர் கால்பந்து குழு, ஏகே சினர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் ஏகே ஆனந்தராஜா ராஜகோபால் ஏற்பாட்டில் வெற்றிகரமாக  இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றிப் பெற்ற குழுக்களுக்கு வர்த்தக பிரமுகர் டத்தோ டாக்டர் சக்திவேல  பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இங்கு இந்தப் போட்டி இரண்டாவது ஆண்டாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்  ஆனந்தராஜா ராஜகோபால் இப்போட்டடியில் எதிர்காலத்தில் இந்திய கிளப்புகளில் இருந்து அதிகமான மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset