நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூடானில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

சூடானில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எல் ஃபாஷர், சூடானின் டார்ஃபர் முழுவதும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படவும் மலேசியா அழைப்பு விடுக்கிறது.

அந்நாட்டில் நிலவும் மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் மிகப்பெரிய அளவில் படுகொலைகள், பஞ்சம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றின் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாகக் கூறினார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை கூட என வகைப்படுத்தக்கூடிய அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

சூடான் மக்களுடன் மலேசியா உறுதியாக நிற்கிறது.

மேலும் அதிக துன்பங்களைத் தடுக்கவும், மனிதாபிமான அணுகலை மீட்டெடுக்கவும், அமைதி, பொறுப்புக்கூறலை நோக்கிய ஒரு நியாயமான செயல்முறையை ஆதரிக்கவும் சர்வதேச சமூகத்தை தீர்க்கமாக செயல்பட வலியுறுத்துகிறது என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset