நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்

ஜொகூர்பாரு:

மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுத்தாலும் அது மஇகாவின் தனிப்பட்ட உரிமையாகும்.

அதைப் பற்றி விமர்சிக்கும் உரிமை மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இல்லை.

அதே வேளையில் மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒருபோதும் இருக்காது.

ஜொகூர் தாமான் புக்கிட் திராமில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்ட்டாத்திற்கு பின் டத்தோஸ்ரீ தனேந்திரன் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜொகூர் மாநில மக்கள் சக்தி கட்சியிம் தொடர்பு குழு தலைவர் டத்தோ சுகு, மாநில செயலாளரும் ஏற்பாட்டாளருமான என். ஜேம்ஸ் ஆகியோர் இந்த கொண்டாட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

கட்சியின் ஜொகூர் மாநில மகளிர் பிரிவுத் தலைவர் தீபா உட்பட ஜொகூர் மாநில உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மேலும் திராம் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி அசிசூல் பின் ஹாஜி பச்சோக், திராம் கௌன்சிலர் ஃபௌசி பைசல் ஆகியோரும் இவ்விழாபில் கலந்து கொண்டனர்.

ஜொகூர் மக்கள் சக்தியினர் மாநிலத்தின் இந்திய சமூகத்தின் ஒற்றுமை, நலன், வலிமையின் உணர்வை இந்தக் கொண்டாட்டம் பிரதிபலிக்கிறது.

ஒற்றுமை, உலகளாவிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் கட்சியின் தொடர்ச்சியான முயற்சிகளின் அடையாளமாகவும் இது உள்ளது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset