நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாஜூ ஹோல்டிங்ஸ் தலைவர் மீதான 145.5 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடி வழக்கை கோலாலம்பூர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது

கோலாலம்பூர்:

மாஜூ ஹோல்டிங்ஸ் தலைவர் மீதான 145.5 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடி வழக்கை கோலாலம்பூர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மாஜூ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் அபு சாஹித் முகமது 145.5 மில்லியன் ரிங்கிட் குற்றவியல் நம்பிக்கை மீறல்  குற்றச்சாட்டை எதிர்நோக்கி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து மாற்ற இங்குள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் கரிப் சமர்ப்பித்த அரசு தரப்பு விண்ணப்பத்தை, அதே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மேலும் நான்கு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள், 13 பணமோசடி குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதி சுசானா ஹுசின் அனுமதி அளித்தார்.

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் 313 மில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கியது.

மேலும் பணமோசடி குற்றச்சாட்டுகள் 139 மில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கியது.

18 குற்றச்சாட்டுகளும் மாஜூ விரைவுச்சாலை நீட்டிப்பு திட்டத்துடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset