நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சத்குருநாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் 125ஆவது ஜெயந்தி விழா; நவம்பர் 15ஆம் தேதி ஈப்போவில் நடைபெறும்: குணராஜ்

கோலாலம்பூர்:

சத்குருநாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் 125ஆவது ஜெயந்தி விழா நவம்பர் 15ஆம் தேதி ஈப்போவில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் ஆலோசகரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் இதனை கூறினார்.

சத்குருநாதர் தவத்திரு சித்ரமுத்து அடிகளார், தாப்பாவிலுல்ல ஜீவ சமாதி கொண்டுள்ள தமது குருவான  சத்குரு ஸ்ரீ ஜெகநாதர் சுவாமியிடம் சீடராக உபதேசம் பெற்றவர்.

பிறகு 1952ஆண்டில் அருளொளி மார்க்கத்தை மலேசியாவில் ஸ்தாபித்தார்.

அடிகளார் மலேசிய திரு நாட்டில் பல தற்காலத்தில் பிரபலமான ஆலயங்களில் தவம் மேற்க் கொண்டு, அந்த ஆலயங்களுக்குச் பாடலும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1995ஆம் ஆண்டு சத்குரு நாதர் தவத்திரு  சித்ரமுத்து அடிகளார் பனைக்குலத்தில் ஜுவ சமாதி அடைந்தார்.

இந்நிலையில் இவ்வாண்டு சத்குருநாதரின் 125ஆவது ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் எதிர்வரும் 15 நவம்பர் 2025, சனிக்கிழமை, காலை மணி 8.00க்கு மலேசிய அருளொளி மன்றம், ஜாலான் வாயாங், புந்தோங், ஈப்போ‌வில்  நடைப்பெற உள்ளது.

இவ்விழாவிற்கு தவத்திரு சுவாமி கோவிந்தன், சிவஸ்ரீ அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்களின் சிறப்புரையோடு மற்ற நிகழ்வுகளும் நடக்க உள்ளது.

ஆக இவ்விழாவில் அருளொளி நன்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து   இவ்விழாவினை மிகச் சிறப்பாக நடத்த எத்தனையுத்துள்ளார்கள்.

இது ஒரு மிக சிறந்த ஒன்று கூடல் நிகழ்வாகும்.

குருவருள் ஆசிப் பெற்று உய்ய மலேசியாவில் உள்ள அனைத்து அருளொளி நன்மக்களையும் ஏற்பாடுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset