நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்

சுபாங்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்.

இன்று தொடங்கி நவம்பர் 6 வரை அரசு முறைப் பயணமாக மாமன்னர் இன்று காலை சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்.

மக்கள், நாட்டின் நலன், நன்மைக்காக பல்வேறு வெளிநாடுகளுடனான மலேசியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் தொடர்ச்சியாக மாமன்னரின் இப்பயணம் அமைந்துள்ளது.

மேலும் நவம்பர் 6 ஆம் தேதி மாட்சிமை தங்கிய மன்னர் பஹ்ரைனுக்கு அரசு முறைப் பயணத்தைத் தொடர உள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு மறைந்த சுல்தான் ஹாஜி அகமது ஷா அல்-முஸ்தாயின் மேற்கொண்ட கடைசி அரசு பயணத்திற்குப் பிறகு,

மாமன்னர் சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட முதல் அரசு முறை பயணமாக இது வரலாற்றைப் படைத்தது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset