நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்

கோலாலம்பூர்:

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர்
பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்.

துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் இதனை தெரிவித்தார்.

16.5 மில்லியன் மலேசியர்களில் 13.1 மில்லியனுக்கும் அதிகமானோர், அதாவது கிட்டத்தட்ட 80% பேர், பூடி மடானி ரோன் 95 முயற்சியை செயல்படுத்துவதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

அக்டோபர் 31 நிலவரப்படி விற்பனை மதிப்பு 2.66 பில்லியன் ரிங்கிட் அல்லது 1.33 பில்லியன் லிட்டரைத் தாண்டியுள்ளது.

முதல் மாதத்தில் பூடி 95 செயல்படுத்தல் சீராக நடந்ததாகவும் அமைப்பு சிறப்பாக செயல்பட்டதாகவும், எந்த சிக்கலும் இல்லை.

பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்கவில்லை என்று அவர் கூறினார்.

ரோன் 95 திட்டம் அமைப்பின் செயல்படுத்தல் மிகவும் விரிவானதாகவும், உள்ளடக்கியதாகவும், திறம்படவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து மேம்பாடுகளைச் செயல்படுத்தும்.

உதாரணமாக, அரசாங்கம்  ரோன் 95 மானியத்திற்கு தகுதியானவர்களின் தரவுத்தளத்தில் பயனர்களைச் சேர்த்துள்ளது.

மேலும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு கூட கூடுதல் தகுதி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் மக்களவையில் ஒரு கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset