நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது

கெய்ரோ:

எகிப்து நாட்டில் சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான அரும்பொருளகம் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

GEM என்று அரும்பொருளகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பண்டைய நாகரிகத்தைக் காட்டும் உலகின் ஆகப் பெரிய அரும்பொருளகம் அது.

GEM அரும்பொருளகம், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான கிசா பிரமிடுகளுக்கு அருகே அமைந்துள்ளது.

அதைக் கட்டச் சுமார் 1 பில்லியன் டாலர் செலவானது.

அரும்பொருளகத்தில் சுமார் 100,000 கலைப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில கிரேக்க, ரோமானிய காலங்களில் கண்டெடுக்கப்பட்டவை.

என்றாலும் இத்தனை ஆண்டுகளாய் அப்படியே உள்ள அரசர் டுடங்காமன் கல்லறையைக் காணவே அதிகமானோர் அங்கு செல்லக்கூடுமென நம்பப்படுகிறது.

1922 கண்டெடுக்கப்பட்ட பிறகு இப்போது தான் அது முதல் முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை உயிர்ப்பிக்கவும் நலிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் அந்த அரும்பொருளகம் உதவுமென எகிப்து அரசு வலுவாக நம்புகிறது.

ஆண்டுக்குச் சுமார் 5 மில்லியன் வருகையாளர்கள் அரும்பொருளகத்திற்கு வரக்கூடுமென எகிப்து மதிப்பிடுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset