செய்திகள் உலகம்
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
மெக்சிகோ:
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வட அமெரிக்காவின் மெக்சிகோவில் சோனோரா மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ நகரில் உள்ள வால்டோ கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சோனோரா ஆளுநர் அல்போன்சோ துராசோ சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சோனோரா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு ஆதரவு குழுவை அனுப்புமாறு உள்துறை செயலாளருக்கு அறிவுர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
