நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொற்றுப்பாதிப்பு உள்ளவர்கள் வாக்குப்பதிவு தினத்தன்று வெளியே செல்ல அனுமதி இல்லை: தேர்தல் ஆணையம்.

கூச்சிங்:

கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் சரவாக் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று வெளியே செல்ல அனுமதிக்கப்பபட மாட்டார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பாதிப்புக்காக தற்போது சிகிச்சை பெற்று வரும் மையங்களில் இருந்து அவர்கள் வெளியேற அனுமதி இல்லை என அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவமனைகள், தனியார் மருத்துவ மையங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், இல்லங்கள் என பல்வேறு இடங்களில் தொற்றுப் பாதிப்பு உள்ளவர்கள் தங்கி உள்ளனர்.

மேலும், கண்காணிப்பு வளையத்திலும் (PUS), விசாரணையின் கீழ் உள்ளவர்களும் (PUI) வாக்களிக்க செல்லும் முன் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பிரிவுகளின் கீழ் உ ள்ளவர்கள் மற்ற வாக்காளர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அவர்கள் வாக்களிக்க தனிக்கூடாரங்கள் அமைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வாக்காளர்கள் சொந்த வாகனங்களில்தான் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், அவர்கள். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset